கவிதையா???

யாருமில்லா வானத்தில்
யாரை தேடுகின்றாய்?
உன்னுள் பெருகும் தூறலின் சப்தம்
அடைமழையின் அறிகுறியா?
எங்கே உன்னை இழுத்து செல்கின்றன
உன் மீதிருக்கும் மேகங்கள்?
உன் பார்வையில், விழும் அருவியை
குடிக்க பார்க்கிறதா ஓடும் நதி?
கலைந்து போயிருக்கும் உன் மனதில்
தெரியுமந்த முகம் யாருடையது?
உன் முன்னால் பிரளயம் நடக்க
பின்னால் முதலைகள் கடக்க
எது உன் தேர்வு?
இத்தனை கேள்விகளை
உன் விலா எலும்பில்
செருகியது யார் அல்லது எது?
நீ அறிய வேண்டியது ஒன்றே ஒன்று தான்
வினாக்களை போர்த்திக்கொண்டு
விடைகளின் மீதே படுத்திருக்கிறாய்

இவைகள் நான் உன்னிடத்தில் சொன்னது...

கேள்விகள் எளிது
ஆனால் பதில்கள் கொடிது
என்று நீ சொனனது என் காதுகளுக்கு எட்டவே இல்லை...

எழுதியவர் : (10-Feb-13, 8:34 pm)
பார்வை : 109

மேலே