கண்ணீர் தேசம்.

.
மனித உரிமை செத்ததங்கே
மனித வேட்டை ஆடுகின்றார்.
கொத்துக் கொத்தாய் மனிதயினம்
கொல்லப்பட்டு அழிகின்றது..
உரிமைக்காகப் போராடி
உயிர்களையே விதைக்கிறார்.
செங்குருதி கலந்து கலந்து
சிவந்தது ஈழக்கடல்.
.
குடும்பங்கள் சிதைந்தன
குழந்தைகளோ அனாதைகள்
விதவையான பெண்களையும்
விலையாகக் கேட்கிறார்.
.சேரமறுக்கும் பெண்களை
சேலை நீக்கி சிதைக்கிறார்.
பச்சிளங் குழந்தைகளை
பாலியிலில் வதைக்கிற்றார்
வீடில்லை வாழ்வதற்கு
காடில்லை கழனிக்கு
உண்பதற்கும் உணவில்லை
உடுத்திடத் துணியுமில்லை
கணவன் முன்னே கற்பழித்து
காட்சிகளை இரசிக்கிறார்
பிணமான பின்னுங்கூட
பிறப்புறுப்பைச் சுடுகிறார்.
பள்ளி செல்லும் வயதிலே
துள்ளி ஆடும் பிஞ்சிலே
கொள்ளி வயிற்றுப்ப் பசியிலே
கிள்ளி மண்ணைத் திண்ணுறான்
படிக்கப் பள்ளி இல்லாமல்
இடிக்கப் பட்டு நொறுங்கின.
மடிக்கும் நோய் தீர்க்கவும்
மருத்துவ மனைகளில்லை..
உறுப்புகளை வெட்டி வெட்டி
தெருநாய்க்கு வீசுறார்
பருப்புதனைக் கடைவதுபோல்
பாவையரை அழிக்கிறார்.
இப்படித்தான் தமினம்
இலங்கையில் மடிகிறது
இருண்ட வனம் மறைந்தயிவர்
என்று காண்பர் விடியலை!
கண்ணீரே கரைபுரண்டு
கடல் நோக்கிப் பாயுது.
உண்ணீரே கிடைக்காது
உடல் காய்ந்து சாயுது.
கண்ணீரின் தேசமது
கன்னிதமிழ் ஈழந்தான்
எந்நாள்தான் மீளுமோ
ஏங்குதே தமிழினம்.