சூரிய பெண்ணுக்கு சந்திரன் காவல்

உனக்கென்ன
மேகத்தை இழுத்து
மெத்தையாக்கி
நிம்மதியாய்
தூங்கி விடுகிறாய்...

நானல்லவா
வெள்ளை சீருடையில்
விடிய விடிய
காவல் காக்கிறேன்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (12-Feb-13, 12:02 am)
பார்வை : 170

மேலே