சுப்பு!
அன்புக்கு இலக்கணம் வகுப்பவன் நீ!
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்;
ஆனால் உன் அன்பை மறவாது இன்று
உனக்காக எழுதுகிறேன் சுப்பு!
இறைவனை என்றும் மதிப்பவன் நீ !
ஈருடல் நாம் எனினும் , சிந்தை மட்டும் ஒன்றுட்யோரே!
உண்மைக்கு என்றும் உதாரணம் நீ!
ஊருக்கும் உன்னால் இயன்றவரை உதவுபவன் நீ !
எளிமையை என்றும் விரும்பும் நீ,
ஏற்றமிகு வாழ்வுதனை நம் சமூகம் காண
அயராது உழைப்பவனும் நீ!
ஐயம் ஏதுமின்றி சொல்வேன் ;
நீ உத்தமனென்று!
ஒன்றான மெய்தேவன் இயேசுவை நீ காண ,
ஓயாது ஜெபித்திடுவேன்!
ஔஷதமாய் நீ வாழ ,
வாழ்த்துகிறேன் உனை இயேசுவின் நாமம் அதில்!