என் மாமியார் உறவினர் ...!
மாமியாரும் மருமளுக்கும் இடையில் சற்று முன் அவர்களுக்கிடையே நடந்தேறியிருந்த சண்டைக்குப் பின்னர், கணவனின் வேண்டுதலுக்கு அமைய கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர் .
. இருவருமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாக பிடிவாதமாக நம்பியதால் வெகு நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை.
சாலையோரத்தில் ஊத்தை பேப்பரையும் கழிவுகளையும் திண்டு கொண்டிருந்த நாயும் கழுதையும் பார்த்த மாமியார் , மருமகளிடம் நக்கலாக, 'உன் உறவினரோ?'
என்று வினவ, மருமகள் ஆத்திரப்படாமல், "ஆம், என் மாமியார் குடும்பத்தினர் !" என்றாள்