காதலிக்கு கல்யாணம் ...
மெதுவாக நடந்து கொண்டு இருந்த கால்கள் தானாக நின்றது ..அங்க நிற்கறது யாரு ..எனது முன்னால் காதலி போல இருக்கே...
.
யாருக்கும் தெரியாமல் காதலித்து ..யாருக்கும் தெரியாமல் பிரிந்த காதல் ..எனது காதல் .
போய் பேசலமா வேணாமா ...மனசு பட்டிமன்றம் போட்டது ...மனசு சொல்வதை கேட்காமல் கால்கள் தானாக சென்றது....
தயக்கத்துடனே ...நீங்க ....நீ ..சுமதி தான?
புன்னகையுடன் பதில் வந்தது ....சுமதியே தான்...
எப்படி இருக்கீங்க ...
நல்லா இருகேன் ...நீ எப்படி இருக்க?உன் கணவர் எப்படி இருக்கார் ...
நல்லா இருக்கோம் ...புன்னகை மாறாமல் வந்தது பதில் ..
ஏன் சுமதி இங்க நிக்குற ..இந்த ஊருக்கு குடி வந்துடீங்களா ....
இல்லை ...இல்லை ..அவரும் ,பையனும் அந்த கடைக்கு போய் இருகாங்க..
நாளைக்கு எங்களுக்கு மணிவிழா..பையனும் ,பொன்னும் ரொம்ப ஆசைபட்டங்கா..இந்த ஊரு அபிராமி அம்மன் கோவில தான் ..நீங்களும் கண்டிப்பா வந்துடுங்க ..உங்கள எதிர்பார்ப்பேன்...
.
கண்டிப்பா வரேன் ....நாளைக்கு பார்க்கலாம்... வரேன் சுமதி ...
..
கால்கள் சந்தோசமா நடை போட்டது .காதலியை பார்த்த சந்தோஷத்தில் ..நாளைக்கு கல்யாணத்துக்கு போகணும் ..காதலி அவள் எப்பொதும் காதலி தான்..