காதலர் தின செய்தி விடுவோம் ....
அவனுக்கும் அவளுக்கும் இடையே
கடந்த ஒரு வருடமாக face book தொடர்பு தான் இருந்தது. இருவரும் அழகில் நீயா ..? நானா ..?
என்கிற அளவுக்கு போட்டி ...
face book தொடர்பு காதலாக மாறியது ..இருவருக்கும் சுமார் 22 வயது மதிக்கலாம் அவன் சொன்னான் அன்பே உன்னிடம் நான் ஒன்றை இதுவரை காலமும் மறைத்து விட்டேன்
நாளை காதலர் தினம் நாம் இருவரும் கடற்கரையில்
முதல் முதலாக சந்திக்கப்போகிறோம் ..ஆனால் ஒன்று மீண்டும் சொல்லுகிறேன் நீ அதிர்ச்சி அடைவாய் என்னை கண்டவுடன் ..தாங்கும் தைரியம் இருந்தால் நான் உன்னை சந்திக்கிறேன்
இல்லையேல் உன் முடிவுதான் என்ன என்று கேட்டான் அவன் ...?
அவள் சொன்னாள் உங்கள் வரவை எதிர் பார்க்கிறேன் வாருங்கள் என்றால்
அன்று அவள் கடற்கரையில் நீண்ட நேரம் காத்திருந்தாள் அவனை காணவில்லை ,...
தூரத்தில் அவன் சொன்ன ரோஸ் கலர் சேட்டுடன் இரண்டு கையிலும் கைப்பிடி தடியை
ஊண்டியபடி ஆட்டோ விலிருந்து இறங்கி வந்துகொண்டிருக்கிறான்..
அவள் ஓடிப்போய் அவனுடைய கையை பிடித்து தாங்கினாள்...
என்ன நடந்தது உங்களுக்கு ...?
ஒரு வருடத்துக்கு முன்னர் எனக்கும் என் நண்பனுக்கும் மோட்டார் சைக்கிள் போட்டி நடந்தது .
போட்டிஎன்றால் மைதானத்தில் நடைபெற வேண்டும்...ஆனால்
நாங்கள் இருவரும் மெயின் ரோட்டில் நடர்த்தியதன் விழைவுதான் இது என்றான்
அவள் சொன்னால் காதலுக்கு ஊனம் ஒரு தடையால்ல ஆனால் இருவரும் இணைந்து காதலர் தின செய்தி விடுவோம் ....
" புத்திகெட்ட முறையில் உடலுறுப்பை வீணாக்காதீர் "