வினோதினி ...அமிலம் விழுங்கிய அழகே
காதலென்ற பெயரால்
கருகிவிட்டது ஒரு ரோஜா ..!!
ஒருதலையாய் காதலித்த
ஒரு தருதலையால்
திராவகத்தின் நாக்கு
தின்று தீர்த்து இவளை ....!!
பெற்ற வயிற்றில்
பிரளயத்தீ...
கொழுந்து விட்டு எரிகிறது
குடும்பமெங்கிலும்...!!
எதை ஊற்றி பெறுவது
இழந்த உயிரை ...!!
காட்டுமிராண்டியின் காதலில்
உதிர்ந்து விட்டதே
ஒரு ஊதாப்பூ ...!!
என்ன பாவம் செய்தாள்
என் சகோதரி வினோதினி?
பெண்ணாய் பிறந்ததே
பெரும் பாவமோ ...?????
பாதுகாப்பில்லை எங்கள்
பாரத பெண்களுக்கு ..
எத்தனையோ
கல்பனா சாவ்லாக்கள்
வந்த பிறகும்
பெண்ணினம்
போதை பொருள் தானோ
ஆண்களின் அகராதியில் ....!!!
ஒரு பொறியாளராய்
மின்ன வேண்டிய மின்னலை
அமிலம் விழுங்கிவிட்டதே
அவசரமாய் ...!!
ஒருதலையாய் காதலித்த
ஒழுக்கம் கெட்டவனே ..
உன் சகோதரியும் ஒரு பெண்தானே
முடிந்தால்
அவளையும் காதலித்துப்பார் ..
உன் தாகம் தீரவில்லைஎன்றால்
உன் அம்மாவையும் அவசியம் கூப்பிடு ...????!!!!