ஊசி காதில் நூல் நுழையுமா?

ஊசி காதில் நூல் நுழையுமா?

இக் கேள்வியை
தன்னம்பிக்கை இல்ல
ஒரு சோம்பேறியிடம் கேட்டால்

அவனின் பதில்

ரொம்ப சிரமப்பட
வேண்டி இருக்கும்

நூல பார்த்த
ஊசி காதைவிட
தடித்து தெரியுது

மாலை நேரம்
வெளிச்சம் பத்தாது

இப்படி ஆயிரம்
ஆயிரம் கரணங்கள்

இல்லங்க முடியாது
கண்டிப்பா முடியாதுனு
நினைக்கிறேன்
இப்படி முரணான
தெளிவில்லா பேச்சு

முடிவில்
இல்ல இல்ல
முடியவே முடியாது

ஊசி காதில் நூல் நுழையுமா?

இதே கேள்வியை

தன்னம்பிக்கையுடன் கூடிய
விடா முயற்சி செய்பவனிடம் கேட்டால்

அவனின் பதில்

நூல் என்னங்க நூல்
மாவா அரைச்சா
உலகத்தையே உள்ளே தள்ளலாம்

இந்தாங்க நுழைச்சிட்டேன்
பாருங்க

பேசி முடிப்பதற்குள்
நுழைத்தும் விட்டான்

நீ எதுவாக நினைக்கிறாயோ
அதுவாகவே மாறிப்போவாய்

எப்பொழுது தெரியுமா

நீ
அதைப்பற்றியே சிந்தனையிலும்
அதற்கேற்ற முயற்சியையும்
செய்யும் பட்சத்தில்

முயற்சி கொள்வோம்
வெற்றி பெறுவோம்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (14-Feb-13, 11:34 pm)
பார்வை : 203

மேலே