உன்னையே எண்ணித் தவிக்கிறேன்
உன்னையே எண்ணித்
…..தவிக்கிறேன்,
என்னை வெட்கம் தின்பதை
…..அறிகிறேன்,
என்னில் ஏற்படும் நுண்ணதிர்வை
…..உணர்கிறேன்,
ஏனென்று நான் அறியேன்
…..உண்மையிது!
உன் குரலைக் கேட்க
……ஏங்குகிறேன்,
உன் முகத்தைக் காணவும்
……துடிக்கிறேன்,
காதல் ஒன்றும் ஓட்டப்
…..பந்தயமில்லை,
காதல் எங்கும் வெகு
…..தூரமுமில்லை!
நானறிவேன்
…..விரைவில் ஓர் நாள்,
நாடி நீயெனைச் சேரும்
…..அந்த நாள் - நீ வருவாய்
என் வாழ்வில்
…..ஒளி சேர்க்கும் நன்னாள்,
உண்மைக் காதல்
…..வெல்லும் நாள்!