மழை
தூறலாய் சிரித்து......சாரலாய் பேசி...
மழையாய் கொஞ்சும்.......
மழலை வேண்டும் இந்நாளை ரசிக்க.........
மின்னல் ஒளியை கண்ணில் காட்டி........
முழங்கும் இடியில் முழுதாய் அணைத்து.......
துளிகள் யாவும் கைகளில் ஏந்தி.........
ஓடும் நீரில் ஓடம் செய்து.......
மூழ்கும் நொடியில் முகம் வாடி....
அடுத்த நொடியில் வானவில் ரசிக்கும்...
மழலை வேண்டும் மழையே உன்னை ரசிக்க.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
