ஒரு புத்தகத்தின் சுயசரிதை

பாசி மணி கோர்த்தெடுத்து
மணி மாலை நெய்வதுபோல்
தமிழ் கடலில்
முத்துமணி கோர்த்தெடுத்து
பாமாலை செய்துவைத்தான்
அதை கோர்வையாய்
கோர்த்தெடுத்து
பூங்கொத்து செய்து வைத்தான்

இரவுபகல் விழித்திருந்து
புதுக்கவிதை படித்திருந்து
புது மனமே வீசவென
சிறகென்று பெயர்கொடுத்தான்
அவன்
சிற்றடிகள் பேரடிகள்
சிந்தையிலே ஈன்றெடுக்க
பெற்றபல வேதனைகள்
சிறகுகள் நானன்றி யாரறிவர் ?

ஈன்றவரே மழலைக்கு
ஏற்று ஒரு பெயர் கொடுப்பார் -எனை
ஈன்றதுமே தந்தைக்கு
"கவிஞன்"என பெயர் கொடுத்தேன்

ஈன்றவளை தாயென்பார் -எனை
ஈன்றவனை தாயென்பேன்
இன்னும் அடி நீள்வதென்றால்
குரு தெய்வம் நீ என்பேன்

பூங்கொத்து உருகொடுத்து
பலவாறு பதிப்பித்து
பத்து வருசமாச்சு
பாரில் நீயோ சிகரமாச்சு

முதலில்
பரபரப்பா பாத்தாங்க -கவி
பசியாற்றி போனாங்க
காலமும் செல்லரிக்க
காலாவதி கன்னிபோல என்னயும்
செல்லரிக்க விட்டாங்க

கிழித்தென்னை கப்பலிட
கலுசரைகல் காத்திருக்கு
சுருல்சுற்றி சீனிகட்ட
இன்னும்பல ஆளிருக்கு

செத்தாலும் என்ன குறை
சாவுகூட எனக்கில்ல
சாகாத வரம் பெற்று
சாவதுதான் எனதுகுறை

இருந்தாலும் என்ன இனி
கன்னிபோல் காத்திருக்க
காவலாளி எனக்கிருக்கு
அணுவணுவாய் ரசித்திருக்க
இன்னும் சில மனமிருக்கு

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (15-Feb-13, 1:29 pm)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 2991

மேலே