மார்தட்டும் வெற்றி மனிதனாய் வாழ்வதே ..........!
சிந்திக்க
சிறிதும் நேரமில்லை
சிதறிப் பிரிகின்ற வழிகளில் ,
சிக்கலினோடே நடையிடும் வாழ்வில் !
சந்திக்கும்
சங்கதிகள் எல்லாமும்
சற்றும் மனம் தளராமல் கற்பிப்பது ,
சளைத்திடாத போராட்டங்கள் மட்டுமே !
இடைவிடாத
இந்நிகழ்வுகளில் நம்மில்
இனம்புரியாத கேள்விகளோ வாட்டும் ,
இலக்குகளை பதறவைத்து வேதனை கூட்டும் !
நேர்மையாய்
நேர்கொண்ட பார்வையில்
நேரம் கடத்தாதவர்களே அதிகம் ,
நேசமிருக்க தூய்மையற்றவர்களே மேலதிகம் !
செயற்கையாய்
செழிப்புற்றதும் உதவிடுமே ,
செங்குருதியோடு சிலிர்க்கும் உணர்வுகளால்
செல்புற்றான மானுடமோ இரங்கிட மறுத்திடுமே !
காயத்தைக்
கட்டிக்காக்கும் கொள்கைகளில்
கவனங்களோ வீங்கி உடைந்தவாறு ,
கணக்கு தீர்க்கும் ஆயுளோ தன்கடன் செய்தவாறு !
மறைக்காதே
மனதினுள் உன்னை ,
மார்தட்டும் வெற்றியானது ஏனோ
மனிதனாய் வாழும் உறுதியில் மட்டுமே !