மூவர்ணக்கொடி
மூவர்ணக்கொடி
---------------------------
இந்தியாவின் ...
எல்லை பாதுகாப்பிற்காக
புத்துணர்வுடன் புறப்பட்டான்
புதுமை வீரன் .....
யுத்தத்தில் இன்னுயிரை
ஈந்தான் இன்முகத்துடன்
அரசு மரியாதையுடன் போர்த்தப்பட்டது
மூவர்ணக்கொடி உடல் மீது...
நெற்றியில் வழிந்த ரத்தம்
செந் நிறத்தையும்
தியாக உணர்ச்சி
வெண்மையையும்
பச்சை நிற வயல் வெளியில்
உடலைச் சுற்றி நின்ற மக்கள்
அசோகரின் ஆரச்சக்கரம் போல ...
தாய் மண்ணிற்காக உயிர் நீத்த
தன் கணவனுக்கு ...
தரணி பாடிற்று புகழாரம்
மீண்டும் ....
தன் மகனை தயார்படுத்தினால்
தாய்நாட்டிற்காக ....
சங்க இலக்கியத்தின்
புற நானூற்றுத் தாய்ப் போல...