.........தாயன்பு .........
அன்பின் அற்புத
பாத்திரம் - அம்மா ....
பல படைப்புகளின் பதிவேட்டில்
முதலிடம் உனக்கே ........
சுவாசத்தின் சுவடுகளை
கருவறைக்கே அனுபியவள் ...நீ ......
துடிப்பான சப்தத்திலும்
துவளாமளிருக்கக் கற்றுக் தந்தாய் ....
என் உணர்வுகளை உருபித்தாய்
உயிரோடு என்னை
புதுபபித்தாய்.....
கலியுகத்தில் கண் முன்
தோன்றும் கடவுள் - அம்மா .....
உயிர்களிடம் ஒட்டி உறவாடும்
உயிர்ப்பான சப்தம் - அம்மா
மனிதனின் மானசீக
மொழி பெயர்ப்பு - நீயே .....
எங்களுக்காக
குருதியை திரித்தாய் ....
பல நாட்கள்
தூக்கத்தை இழந்தாய் ....
குலமகளாய் என்னை
ஈன்றாய் ....
உன் தாயன்பு முன்னால்
உலக அதிசயங்களும்
மண்டியிட்டு வணங்கும் ....அம்மா ....