(Google) தெரிந்தது கூட,....?

கூகிளுக்குத் (Google) தெரிந்தது கூட, நம் தமிழர்களுக்குத் தெரியவில்லை. ?

”அம்மா என்றால் தாய் மம்மி (Mummy) என்றால் சவம்”

என எப்பொழுது இந்த சமுதாயம் புரிந்து கொள்ளும்? பெற்ற தாயை மம்மி என்றழைப்பது மிகவும் தவறு,

ஆங்கிலத்தில் மொம் (Mom) அல்லது மொம்மி (Mommy) என்று பெற்ற தாயை அழைப்பர். ஆனால், நம் தமிழர்கள் சிலர் மம்மி என்றழைப்பது வேடிக்கையாக உள்ளது. அதையும் சிலப் பெற்றோர்கள் கேட்டு மகிழ்கின்றனர்.

அம்மா என்னும் சொல்லில் உயிர் எழுத்து அ மெய்யெழுத்து ம் உயிர்மெய் எழுத்து மா இருக்கிறது அந்த வார்த்தையிலேயே நம் பிறப்பின் அர்த்தம் விளங்கிவிடும் ... அம்மாவிற்கு அர்த்தம் புரியாதவர்கள் தம்மை மம்மி என்று அழைக்க சொல்லிக் கொடுக்கிறார்கள் பிள்ளைகளுக்கு....



( பார்த்ததில் பிடித்தது)

எழுதியவர் : கவிஞர் இனியவன் (17-Feb-13, 10:06 pm)
பார்வை : 110

மேலே