****** மலர்களோடு உறவாடு ******

விதைகளோடு வீழ்த்து பார்
நீயும் ஓர் நாள் முளையிடுவாய்
தளிர்களோடு உறவாடிப்பார்
நீயும் ஓர் நாள் துளிர்விடுவாய் !!


செடிகளோடு சேர்ந்து பார்
நீயும் ஓர் நாள் சீர் பெறுவாய்
கொடிகளோடு இணைந்து பார்
நீயும் வாழ்வில் வளைந்து கொடுப்பாய்!!


மரங்களோடு வாழ்ந்து பார்
மன உறுதி உன்னை முத்தமிடும்
மலர்களோடு பேசிப்பார்
நீயும் வாழ்வில் மணம் பெறுவாய் !!


இலை எடுத்து நசுக்கி பார்
மணம் வீசும் மருந்தே கிடைக்கும்
கிளைகளோடு உறவாடு
உன் உறவெல்லாம் பல கிளைகளாகும் !!

காடுகளுக்குள் நுழைந்து பார்
உன் கல்மனமும் கரைந்து போகும்
கழனிகளுக்குள் நடந்து பார்
கலம் காணும் உன் வாழ்வெல்லாம் !!


வனங்கள் எல்லாம் சுற்றி வா
உன் வாழ்வெல்லாம் வசந்தமாகும்
கனிகளோடு உணவைச் சேர்
காலமெல்லாம் சுகம் பெறலாம்!!


மலர் இதழ்களோடு இணைந்து பார்
உன் வாழ்வெல்லாம் மென்மையாகும்
மகரந்தப் போடி எடுத்து நுகர்ந்து பார்
மங்கல வாழ்வு உன்னை தேடி வரும் !!


கல்லெடுத்து எரிந்து பார்
கனிவான பழம் கிடைக்கும்
கத்தியால் வெட்டிப்பபார்
அடுப்பெரிக்க விறகு கிடைக்கும் !!


*******மலர்களோடு உறவாடு******
நீயும் ஓர் நாள் பூத்து குளுங்குவாய்
விதைகளின் ஆதாரத்தை ஆய்ந்து பார்
நீயும் ஓர் நாள் விதைக்கப்படுவாய் !!


@----@----@----@

எழுதியவர் : (17-Feb-13, 11:26 pm)
சேர்த்தது : gayathri devi
பார்வை : 94

மேலே