அன்பே விபத்து ...
இதயம் வெடித்தடி ஒரு கணம்
நீதானா என்று விழிகள் பொய்த்தடி...
சாலையின் நடுவில் சக்கரத்தின் அடியில்
உறைந்த இரத்தம் சூழ பல
நூறு மக்கள் திரள உயிரைப்
பிரிந்து வேற்று உடலாய் நீ
இருந்த அந்த ஒரு கணம்
இதயமும் நின்று கண்கள் இருண்டு
என்னையும் மறந்து நான் துறந்தேன்
உயிரை உனது அருகில் பிணமாய்
விழுந்தேன் உன் அன்பெனும் விபத்தால் !....