அன்பு பேதை ....

மற்ற பெண்ணிடம் பேசக்
கூடாது என்று சொல்லும்
பேதை அல்ல நான்...
என்ன பேசினாலும் அதை
மறைக்காமல் என்னிடம் சொல்லும்
உன் அன்பு போதுமடா...!!!

எவ்வளவு நேரம் ஆனாலும்
என்னை எதிர்பார்க்கும் அந்த
பொய்க்காத விழிகளை நம்பிதான்
நான் வாழ்கிறேன் உனக்காகவே !..
எப்போதும் உன்னையே சிந்திப்பதில்லை
எப்போதும் உன்னையே நேசிக்கிறேன் !...

எழுதியவர் : வீரா ஓவியா (18-Feb-13, 4:08 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 107

மேலே