கூட்டு முயற்சி--ஒரு கருத்துக் கண்ணோட்டம்.
ஒருவர் குருடர் மற்றவர் முடவர்.
இருவருமே நல்ல தமிழ் புலவர்கள்.
ஒருவரை ஒருவர் ஏளனம் பேசிடும்
பருவமும் புரிதலும் கொண்ட நண்பர்கள்.
இருவரும் ஓர் நாள் வைகை ஆற்றின் கரையோரம் நடந்தனர். குளிக்கலாம் என்ற ஆசை எழுந்தது.
முடவர் கரை ஓரப் பாறையில் அமர்ந்து
கைக் கிண்ணம் கொண்டு மொண்டு குளித்தார். குருடரோ நீரில் சிறிது தூரம் சென்று ஒரு பாறையைப் பிடித்து நின்றார். நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்த பின் மேல் சட்டையை கழற்றி நீரில் நனைத்து பறையில் அடித்துத் துவைத்தார்.. இப்படியே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கையில் வைகையில் வெள்ளம் வருகிறது.. துணியை பாறையில் வைத்து விட்டு பாறையை இறுகப் பற்றிக் கொள்கிறார் ஆனால் துணியை வெள்ளம் கொண்டு போய் விடுகிறது. பாறையைத் தடவிப் பார்த்து துணி இண்மையால் முடவரைப் பார்க்க அவர் “ நீரிலே தோய்த்து எடுத்து அடுத்து அடுத்து அடித்தால் அது நம்மிடமிருந்து தப்ப நினைக்காதோ“ எனக் கேட்க ”இந்தச் சட்டை போனால் என்ன எனக்கு மாமதுரைச் சொக்கலிங்க பெருமானே துணை எனப் பதில் அளிக்கிறார். அந்தப் பாடல்
அப்பிலே தோய்த்தெடுத்து அடுத்தடுத்து நாமதனை--
தப்பினால் நம்மையது தப்பாதோ
இக்கலிங்கம் போனாலென் மாமதுரைச்
சொக்கலிங்கப் பெருமானே துணை.
இவ்வாறு கேள்வியும் பதிலுமாக அமைவதே கூட்டு முயற்சி எனும் இலக்கிய மரபு ஆகும். தமிழ் திரைப் படங்களில் கூட ஒரே பாடல் ஆசிரியர் பாடலை எழுதி இருப்பினும் ஆண்-பெண் பாடுவது போலவும் கேள்வி பதிலாகவும் பாடல் அமைந்து இருக்கும். எடுத்துக் காட்டாக
“பெண்களில்லாத உலகத்திலே
ஆண்களினாலே என்ன பயன்”
எனவே அண்மையில் எழுத்து தளத்தில் தொடரப்பட்ட கூட்டு முயற்சி எண்ண வடிவு சிறந்தது ஆக இருப்பினும் ஒரே எண்ண அலை வரிசை கொண்டோரால் அது எழுதப்படவில்லை . மற்றும் மரபாகிய கேள்வி பதிலாக அமையவில்லை. அதையே 5 கண்ணிக்ள் கேள்விகளாகவும் 5 கண்ணிகள் பதிலாகவும் எழுதினால் சிறப்படையும்
எடுத்துக் காட்டாக.
வேலை இல்லாத ஆண் பிள்ளைக்கு
எவர்தான் பெண்ணைக் கொடுப்பாரோ
பெண்கள் வேலைக்குச் செல்லும் இந்நாளில்
கண்களைப் போலே காத்திடுவார்.
இப்படி முயன்றால் கூட்டு முயற்சி எங்கோ போய் இருக்கு்ம் என்பது எனது தாழ்மையான கருத்து. முயல்வோமே.