உனக்கான யன் செய்தி இதுதான்.............

உன்னை
தேடியலைவதென்பது

வெண்ணிலவின் ஒளியை
வெற்றுக் குடத்தில் பிடிப்பது போன்ற
பைத்தியக்காரத்தனமானது.
அதே சமயத்தில்
அது
கவிதைத்தனமானதும் கூட.....

என் தேடலின் நோக்கம்
உன்னை அடைவதல்ல
என்னை
உன்னிடம் ஒப்படைத்து விடுவது


விளக்கை அடைகிற முயற்சியில்
நான்
விழிகளில் இருக்கும்
வெளிச்சத்தையே
இழந்துகொண்டிருக்கிறேன்..........

அதற்காய்
ஏளனமாய் சிரிக்கலாம் நீ

ஒன்றை தேர்ந்துகொள்
ஒரு போதும்
அவமானத்தால்
நின்று போகாது
எனது தேடல்.............

நீ
திசைகளுக்கு
அப்பால் வாழலாம் .....

உன்
பாதை
பார்த்தறிய முடியாததாய்
இருக்கலாம்......

உன்
செவிகளில் நான்
சேர்க்க விரும்பும்
செய்தி இதுதான்

ஒரு நாளில்......

இழுத்து வந்து
உன்னை
என்முன் நிறுத்தும்
என் காதல்

அதுவரை

மனசுக்குள் உன்னை
சல சலத்துக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த
சிற்றோடை..................

எழுதியவர் : ந.புதியராஜா (18-Feb-13, 3:05 pm)
சேர்த்தது : puthiyaraja
பார்வை : 94

மேலே