தோழா ஒரு விண்ணப்பம்...

தோழா ஒரு விண்ணப்பம்...
ஒரு இலக்கணமும் தளத்தின் படைப்புகளுக்குத் தேவையில்லை எனவும் ,படைப்பை வாசித்து போ-திருத்தம் செய்ய நீ யார் எனவும் ஓங்கிக் குரலொலி எழுந்துள்ளது..

பொதுவாக ஒரு நல்ல படைப்பு என்று எனக்குப் புரிந்த மாத்திரமே அதில் வரியமைப்பு சரியில்லை எனில் மாத்திரமே சீர் செய்து வருவது கொச்சைப் படுத்தப் பட்டு விட்டது...

இந்நிலையில் படைப்புகள் ஒரு வரைமுறைக்குள் படைக்கப்பட வேண்டாமா...? எந்த இலக்கணமும் தேவையில்லையா..?

மரபு பா எனில் இலக்கணம் உண்டுதானே...?
புதுக்கவிதை எனில் வேண்டாமா..?

வானம்பாடி இயக்கத்தின் பலரும் மரபு படைப்பு ஆழம் உணர்ந்த விற்பன்னர்கள்..அவர்களின் புதுக்கவிதை பேராற்றல் மிக்க ஆயுதம்..பல குமுகாய கோளாறுகளை வீதிக்கு கொண்டு வந்தது -தீர்வு கண்டது என்பதெல்லாம் புதுக்கவிதை படைப்பாளிகளின் கைவண்ணமே..

"யாதும் ஊரே யாவரும் கேளீர் "-இது கணியன் பூங்குன்றன் படைப்பு

"பூமியின் தோல்

உலகெங்கும் ஒன்றுதான் "-இது பாப்லோ நெருதாவின் படைப்பு..


"ஊருக்குக் கிழக்கே உள்ள

பெருங்கடல் ஓர மெல்லாம்

கீரியின் உடல்வண் ணம்போல்

மணல்மெத்தை . அம்மெத் தைமேல்

நேரிடும் அலையோ கல்வி

நிலையத்தின் இளைஞர் போலப்

பூரிப்பால் ஏறும்,வீழும்,

புரண்டிடும், பாராய் தம்பி.."

--இது பாரதிதாசன் கடல் பற்றி தான் கண்டவாறு பார்க்க நம்மை அழைக்கும் கவிதை இது



பாப்லோ நெருத கடலைப் பார்க்கும் பார்வை இப்படி..

"வெள்ளைச்சீருடை தரித்துப் பள்ளிக்கூடத்திற்கு

எல்லா நேரமும் அலைகள் வருகின்றன"

".எனது கவலை எல்லாம் நாளைய தலைமுறை மரபும் இன்றி புதுக்கவிதையில் எதுவும் இன்றி தமிழை என்ன செய்ய போகிறார்களோ என்றுதான்...!!!

இத்தளம் பெரிதும் நமக்கு உதவி செய்யும் பணியை முறையாக நாம் பயன்பாடு காலத்திற்குள் செய்ய வாருங்கள் தோழர்களே..என நாம் அழைக்க வேண்டாமா..?
இதற்கு ஒரே வழி இதுவாக இருக்கலாமா..?...

"சரி என்பதை சார்ந்து இருப்பதும்

தவறு என்பதை தண்டித்து அழிப்பதும்

அறிவின் வளர்ச்சிக்கு அடையாளங்கள்."



-----இதுவும் ஒரு புதுக்கவிதையே .இது ஈரோடு தமிழன்பன் படைத்த வரிகள்.

சிந்தித்து தமிழ் காப்போம் வாரீர்...



அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (18-Feb-13, 3:04 pm)
பார்வை : 227

மேலே