இதுதான் காதலென்பதா ?

பனி படர்ந்த புல்வெளியில்
நீயும் நானும்
வேர்த்தே அமர்ந்திருந்தோம் ...

யார் முதலில் பேசுவது ?
எப்படி தொடங்குவது ..
பார்வையிலேயே
பல மணிநேரம் பறிபோனது ...

நிறைய பேசியிருக்கிறோம்
பல விசயங்கள் ...
காதலை சொல்ல வரும்போது மட்டும்
ஏன் வார்தைக்களுக்கு வாய்ப்பூட்டு ...???

நான் வானத்தை பார்க்கிறேன் ..
நீ புற்களை எண்ணுகிறாய் ..

தொண்டை வற்றிப்போனது ...
நா வறண்டு ...
உதட்டுவெடிப்பில்
உண்மை ஒளிந்திருந்தது ...!!

நீ சொல்லேன் முதலில் ..
மனசாட்சி என்னிடம் மண்டியிட்டது ...
முந்த்ரிகொட்ட நீ சொலேண்டா ..
நீ முனுகினாய் ...

போர்முனையில் நிற்கும்
வீரனாய் தைரியம் வரவழைத்து
தயாரானேன் காதல் சொல்ல ....
உனக்கெப்படி தெரியும்
உள்ளாடை நனைந்து நான் நிற்பது ..!!

உன் முகம்பார்க்க முடியாமல்
திணறினேன் ..
நடுக்கமும் தயக்கமும்
நசிக்கியது நாலாபுறமும் என்னை ..!!

மூளையின் முதுகென்கிலும்
முள் தைத்தது ..
நுரை ஈரல்
காற்றை கடினமாய் உள்வாங்கியது ..

முந்திக்கொண்டாய் நீ
"உயிருக்குயிராய் உன்னை
காதலிக்கிறேன்" ...
மனதை திறந்து
மலர்களை பிரசவித்தாய் ...

காதலின் தவிப்பும் வலியும்
தவிடுபொடியாகி ...
இதயம் லேசானது ...

ஏன் ரத்தத்தில்
காதல் ஜீன்கள்
கைகுலுக்கிகொண்டன ..

நிலவு தரையிறங்கி வந்து
முத்தம்மிட்டதுபோல் உணர்ந்தேன் ...

உரிமையோடு
உன்னை தொட
நான் முயன்ற போது..
இச்சென்று முத்தம் வைத்தாய் நீ
என் கன்னத்தில் ...

இப்போது
நான் வெட்கத்தில் சிவந்தேன் ..

எழுதியவர் : அபிரேகா (18-Feb-13, 6:24 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 104

மேலே