விலைவாசி
பந்தாபரமசிவமாய் இருந்த நான்...
மின்கட்டண உயர்வால் மிடில்கிளாஸ் மாதவனானேன்...
பஸ்கட்டண உயர்வால் பட்ஜெட் பத்மநாபனானேன்...
அரிசி விலை உயர்வால்
அதளபாதாளத்திற்கு சென்றேன்...
ரயில் கட்டண உயர்வால்
ராக்கெட் ராஜாவாகி
ராபரிங் பண்ணாததுதான் மிச்சம்..
அரசு எந்திரத்திடம் வாங்கிய அடிமேல் அடியில் ஆடைகள் இழந்து...
கோவணம்தான் மிச்சமாகுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்...
அடுத்த அடி பெட்ரோல்-டீசல் விலை உயர்வெனும் பேரிடியாய் விழுந்தது...
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறதால நம்மள ரொம்ப நல்லவங்கனு நினைச்சுட்டாங்களோ...!