உனக்காக மட்டும்
என் உயிர் பிரிய முன்பு
உன்னப் பிரியேன் நான்
முழுநிலவாய் நீ என் அருகிலிருந்தாலும்
நெருங்க நினைக்கும் போதேல்லாம்
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய் - ஆனால்
நானோ சூரியனையே காதலிக்கும் பினிக்ஸ் பறவை
நீ என்னை எரித்து சாம்பலாக்கினாலும்
என் காதல் என்றும் உன்னோடுதான்.
தந்தியில்லா வீணை நான்
இராகம்தனைத் தேடுகின்றேன்
உன் உறவு தந்த சுர(க)த்தை நினைத்து
மெல்லக் கண்ணை மூடுகின்றேன்
காதல் என்பது கானல் நீரா?
என் கனவுகளில் தினம் உன் வருகைதான்
அதனால்தான் அதற்கு வேறொரு பேரா?
நீ என்னை மறந்தாலும்
நினைவு உன்னைத் தேடுதே - நீ
வெகுதூரம் பறந்தாலும்
மனம் உன்னை நாடுதே
அன்பே நான் வாழ்வேன்
உனக்காக மட்டும் என்றால்.