ஈர விழிகள்!!!!

நிழல் ஒன்று தொலைவில் தெரிந்தது.
துணை ஒன்றை கூட்டி வந்தது.
அறிமுகம் செய்து நெஞ்சை கிழித்தது.
புதைந்த காலம் கண்முன்னே எழுந்தது.

-இது நிகழ்காலமா?
இல்லை இளகும் காலமா?
கண்கள் இமைக்கவும் மறுக்குதே!!!

கண்ட கனவு, கண்ணீரில் மூழ்கியது.
போலிச் சிரிப்பு, வலிகளை கூட்டுது.
கால்கள், ஏனோ பாதையை மறந்தது.
ஏது செய்ய? கைகளும் கேட்குது.

-இனி என் வெளிச்சம் எங்கே?
என் மனமும் எங்கே?
உள்ளம் கல்லாய் மாறியதே!

கேள்விகள்,பல தனிமையில் தோன்றியது.
பதில்கள், யாவும் இருளுக்கு புரிந்தது.
கண்ணீருக்குள், காதல் தூக்குப் போட்டது.
ஏனோ என்மனமும் ஈரமாய் போனது.

-தலை சாய மடித் தேடினேன்!
சொல்லி அழ மொழி தேடினேன்!
ஏனோ என் உயிரும் ஊனமானதே!


காதல்!இன்று வேறோர் கையிலே.
வலியில் என் வழியும் தொலைந்தது.
இருளை என் இமையும் தழுவுது.
மௌனம்,இங்கு புரியா கோலமானது.


-காதல்! இன்று பொய்யாய் போனதா?
மெய்! இனி உயிர் வாழுமா?
உயிரை விட்டு உடல் போகுமா ?

எழுதியவர் : சுமி (20-Feb-13, 9:46 am)
பார்வை : 701

மேலே