நானிங்கு நலமில்லை

நாளையை எண்ணி எண்ணி
இன்றை தொலைத்தேன்..

நேற்றை நினைத்து நினைத்து
தாடி வளர்த்தேன்..

கவிதை எழுத முயன்று
கண்ணீர் வடித்தேன்..

உன்னில் ஆசை கொண்டு
என்னை மறந்தேன்..

எனைத்தேடி பல நேரம்
தவியாய் தவித்தேன்..

நீயின்றி நானில்லை
நானிங்கு நலமில்லை..

உனைக்கண்ட நாள் முதலாய்
நான் பாசமானேன்

நீ சென்ற நாள்முதலாய்
நான் மோசமானேன்...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Feb-13, 3:21 pm)
பார்வை : 671

மேலே