இருப்பதில்லை - சத்தியமணி

சிரிப்பில் இருக்கும் மருத்துவம்
மருந்தில் இருப்பதில்லை
களிப்பில் இருக்கும் மருந்தகம்
கழனியில் இருப்பதில்லை
அன்பில் இருக்கும் ஆற்றல்
அணுவில் இருப்பதில்லை
அணைப்பில் இருக்கும் ஆறுதல்
அலைந்தால் இருப்பதில்லை
பண்பில் இருக்கும் சிறப்பு
பளிங்கில் இருப்பதில்லை
பணிவில் இருக்கும் மதிப்பு
பதவியில் இருப்பதில்லை
முயற்சி தனைப்போல் வெற்றி
எதிலும் இருப்பதில்லை
முதிற்சியில் தமிழாய் இனிக்க
சலிப்பே இருப்பதில்லை