கண்ணீர் தேசம்

வரப்பு வெட்டி கலப்பப் புடிச்ச
படிக்காத பாவி மக்க நாங்க
வெதைக்க வச்ச வெதநெல்லும்
வெந்தப்பொறவு வெதைக்க
நெல்லுமில்ல - செரிக்கச் சோறுமில்ல
ஆத்துத்தண்ணியும் வரக்காணும்
ஏச்சுப்புட்ட வானத்தயும் வெறிச்சுப்பாக்கக்
காத்துக்கிடக்கோம் பாவப்பட்டு
ரெண்டுத் தூத்த விழுவாதானு ..
உப்புத்தண்ணில நெல்லு முளைச்சா
முப்போகம் வெளஞ்சு போகும்
மிச்சமிருக்கக் கண்ணுத்தண்ணியில..

எழுதியவர் : இளம்பரிதி (20-Feb-13, 1:18 pm)
பார்வை : 170

மேலே