எம் பாலச்சந்திரன் !
ஈராறே வயது - ஆம்
பெயருக்கு ஏற்றாற்போல்
இள நிலவாய் முகம் - இன்று
காலனின் காலடியில் !
சிறு புலியெனினும்
மார்பில் துளைவாங்கி
வீரத்தமிழனென
செத்துகிடக்கிறான்
எம் பாலச்சந்திரன் !
மூன்றடிக்கும் குறைவான
தூரத்திலிருந்து - ஐந்து
தோட்டாக்கள் - தவணை
முறையில் அப்பிஞ்சின்
உயிர்பறித்த போது - கடவுள்
கண்மூடி நின்றாரா ?
கண்மூடிக் கிடந்தாரா ??
புத்தம் பேசும் செந்நாய்களே...
சுற்றி நிற்கும் - மண்
மூட்டைகளுக்குள்
இருக்கும் ஈரம்கூட - உங்கள்
இதயக்கூட்டில் இல்லையா ?
இதயமாவது உண்டா ??
சிங்கள செருப்புகளே...
போர்க்கள மரபுகளின்
மண்டை பிளந்து
பிஞ்சை கிழித்து
மார்தட்டும் நீங்களெல்லாம்
மனித சாதியா ?
மலச் சகதியா ??
எச்சிலொத்த வெள்ளையில்
சுடிதார் அணியும் - உம்
தலைவனின் பேடித்தன்மை
உலகறிந்த ஓன்று - விரைவில்
உண்மைகள் கொணர்ந்து - ஏப்பம்
விடுவோம் அவன்கறி தின்று !
அந்நாயின் உயிருடன்கூடிய
உடலெனுக்கு கிடைத்தால்...
மரணத்தின் சுகம் கற்பிக்க
கைவசம் யோசனைகள்
பலவுண்டு - சோதனைகள்
சிலவுண்டு - தருவேன் மரணம்
களவாண்டு - சிறுகச் சிறுக !
வலியின் ரணம் பெருக... பருக !
அத்தளிரின் முகத்தை
பார்க்க பார்க்க - என்னுள்
குடியிருக்கும் அரக்கன்
விழிக்கிறான் - ஆயினும்
தாய்த்தமிழ் நாடு விதிப்படி...
நாமெல்லாம் மூடிக்கொண்டு
இருப்போம் - ஏனெனில்
நமக்கு இறையாண்மை முக்கியம்
அதற்க்கு இரை - நம் ஆண்மை !
ஆயுதம் துப்பிய வீரத்தில்
ஆணவம் ஓங்கிய ஓநாய்களே...
ஆவணங்கள் வரட்டும் - உம்
கோவணங்கள் உருவ - நீர்
அனுதினமும் கருவ !
ஓயாத அலைகளாய் - கரை
ஓங்கி அடிக்கும் நாட்களும்...
விடிந்தே தீரும் - உம் விழி
நிறைந்த வலி தரவே - அதையே
நிரந்தர வழியாய் தரவே...!
(இலங்கை மதம் பிடித்த ஆணவ வீடர்களின் கொலைவெறிக்கு பலியான மேதகு. பிரபாகரனின் இளைய குமாரன் திரு.பாலச்சந்திரன் அவர்களின் ஆன்ம சாந்தி அடைய பிரார்த்திப்போம்....கண்ணீரை வரிகளாக வார்க்க முயற்சிக்கும்போது...கவித்துவம் குன்றி...வார்த்தைகள் தடித்து விழுகிறது...!என்ன நடந்து என்ன....வாருங்கள் இறையாண்மை பேணுவோம் )