வார்தையொன்று போதாது
அவரவர் வாழ்கையில் ஆயிரமாயிர அர்த்தங்கள்
மனக்கதவு திறப்பதேனோ அதனை எண்ணி ஏங்குகையில்
விழிகளினில் தழும்பிடும் துளிகள் சொல்லிடுமே
பெருகிடும் வெள்ளமன்று வாழ்க்கையின் அழுத்தங்கள்
வானத்தில் வீற்றிருக்கும் நட்சத்திரங்கள் போலன்று
வாழ்க்கையினில் மின்னிடும் துன்பங்கள் ஆயிரம்
ஏனென்று கேட்பதற்கு வார்த்தையொன்று போதாது
காலத்தின் விந்தை என்பேன் இதனை எண்ணுகையில்
பருவங்கள் மாறினாலும் மானிட கோலங்கள் மாறுவதில்லை
என்னவென்று உரைப்பதோ வாழ்க்கையின் லீலையை
கடல் அலைகள் போலவே எழும்பிடும் சோகங்களே
உள்ளம் குமுறுதே அதனை நித்தம் உணருகையில்
மதியால் புலமை வென்றிடுவீர் மனிதரே ஆயின்
உடன் பிறக்கும் விதியை வெல்லுவர் இப்பிறவியில் தோன்றிடுவாராயின்
தென்றல் வீசுமே மனச் சோலையில் என்றென்றுமே
வார்த்தையொன்று போதாது மலரும் உவகையைச் சொல்லவே...