குழந்தைத் திருமணம்....

குளிப்பது போலவும் தான்
ஆடைகள் அவிழ்ப்பதும்
பின் மேல்பவனி வருவதும்...
ஊர்ப்புற மாரி கோயில்
கடா போலில்லாமல்
மஞ்சள் அலங்காரம் முடிந்தும்-
நாள் கழித்தே
வெட்டக் கொடுத்தார்கள்..
ஆணுக்கும் பெண்ணுக்கும்
திருமண வயது சொன்ன
வகுப்பிலிருந்தே வருவதாயிற்று
வயசுக்கு வந்தபோதும்
அன்றும்.
யாருக்கும் தெரிந்துவிடும்
எதிலும் வளரவில்லையென...
இருந்தும்
நேந்து விட்டது நாள் பொறுக்காதென
மஞ்சள் கயிர் இறுக்கி
ஊர் கூடித் தூக்கிலேற்றிப் போனபின்
நீல நிற இரவுகளில்
பழுத்த இரும்புத்துண்டின்
நீள் வேட்கையில்
உயிர் போவதாய் நானும்
உயிர் தருவதாய் அவனும்...!

எழுதியவர் : ஆண்டன் பெனி (21-Feb-13, 2:06 pm)
பார்வை : 295

சிறந்த கவிதைகள்

மேலே