ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு ...
குண்டுகள் வெடித்தது மீண்டும்
மாண்டனர் அறியா அப்பாவிகள் !
ஆந்திர தலைநகரில் வெடித்தது
அதிர்ந்த உள்ளங்கள் துடித்தது
இறந்த உடல்களோ பறந்தன
பிழைத்த உயிர்களோ ஓடினர்
சிக்கிய உள்ளங்கள் தவித்தது
சிந்திய ரத்தமோ உறைந்தது
முடிவே இல்லா தீவிரவாதம்
முடிந்திடும் நாள்தான் தெரியுமா
வன்முறை வெறிச்செயல் ஒழிந்திட
வழிமுறை காண்போம் விரைவிலே
நின்றிடுவோம் அரணாய் அனைவரும்
ஒன்றிடுவோம் தேசத்தைக் காத்திட
பாவிகளைத் தூக்கில் போடுவோம்
ஆவிகள் அடங்கிட செய்திடுவோம் !
பழனி குமார்