என் காவிய காதலாய் நீ

கவிதை எழுத வரிகள் ஏதுமில்லை
கவிதையாய் நீ வந்த பிறகு

சிறுசில் விளையாடும் பொழுது
என் கை பிடித்தே ஓடுவாய்
நான் உனை காதல் கொண்டேன்
என அறியாமல்
அன்றே ஓடி விடலாமோ
என்று நோட்டம் விடுவேன்
உனை கேட்காமலே

குறும்பாக செய்த சண்டைகள் இன்று காதலாக மாறி கரும்பாக
இனிக்குதடி

உனக்காய் பிறந்தேன் என்று
பார்க்கும் அந்த கண்கள்
சொன்ன பார்வை புரிந்தது
என்று பார்க்கும் இந்த கண்கள்

நானா யென என்னயே பார்க்க
வைக்கிறாய் காதல் என்ற
சொல்லினால் என்னையே எனக்கு
அறிமுகப்படுத்துகிறாய்

என்னுள்ளே வேராய் நீ
காதல் என்னும் விதையைய்
புதைத்துவிட்டு சுதந்திரமாய்
அசைந்தாடுகிறாய் என் மேலே நீ

முச்சுக்காற்றைக்கூட சோதிக்கிறேன்
என்னுள் இருக்கும் உன்னை
அழிக்க வேண்டாத வாயுக்களை கூட்டி
செல்லுமோயென

பூவெல்லாம் பாடுகிறது
உன் பெயரை கீதமாக
பூவிற்க்கு அரசியாய்
பூத்த பூவிற்க்கு அரண்மனையாய் நீ

உன் நினைவுகளை நேசிக்க
தனிமையை தேடுகிறேன்
நேசிக்கும் முன்னே வருகிறாய்
நினைவுகளாய் அல்ல நிகழ்வுகளாய்...

எழுதியவர் : மணி (21-Feb-13, 10:34 pm)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 105

மேலே