திருமண முறிவு
கருவறை முதல் மணவரை வரை
எங்கும் தொடர்ந்த காதல்,
ஏன் வரவில்லை;
என் கல்லறைக்கு மட்டும்!
கண்கள் வேண்டாமென்றா?
அல்லது
அதில் கனவுகள் வேண்டாமென்றா!
இன்பங்கள் வேண்டாமென்றா ?
அல்லது
அதில் இமைகள் வேண்டாமென்றா!
கால் தடம் வேண்டாமென்றா ?
அல்லது
இந்த க(ல்லறை)ழிவறை வேண்டாமென்றா!
எது சுமைஅல்லவே என் உயிரே,
சுகம் தான் என்றால்.....!