நெஞ்சமடி நீ எனக்கு
நெஞ்சமடி நீ எனக்கு
கொஞ்சும் தமிழ் நான் உனக்கு...
அன்னைமடி நீ எனக்கு
மெத்தைமடி தான் உனக்கு
ஆயிரம் தான் இன்பங்கள் உனக்கு..
அத்தைமடி நீ எனக்கு
நூறு சொந்தங்கள் தான் எனக்கு...
மழலைமடி நீ எனக்கு
சொல்லாத கனவுகள் தானடி எனக்கு...
கொஞ்சும் மொழி தான் உனக்கு
அன்பின் மொழி தான் எனக்கு..
பிள்ளை மொழி நீ எனக்கு
முல்லை சிரிப்பில் தான் எனக்கு
தொல்லை துன்பம் தீர்ந்ததடி எனக்கு..
சொர்க்கமடி நீ எனக்கு
நரகமில்லை இனி எனக்கு ...!