இடப்புறம் ஒன்று துடிக்கின்றதே ...

காகிதமும் பேனாவும்
கையில் கிடைத்தால்
கிறுக்கிச் செல்லலாம்

மடிமேல் கணினியும்
சாவிப் பலகையும்
கை வசமானால்...

உயிர் எழுத்துக்களையும்
மெய் எழுத்துக்களையும்
பெருக்கி வந்த சொற்களை
அடுக்கி வைத்தால்
காகிதப் பக்கங்களில் விரியலாம்
கணினியின் நினைவுகளில் சேரலாம்

இதோ இங்கே இடது புறத்தில்
துடிக்கின்றதே ஒன்று
அங்கே எத்தனை வந்து சேரும்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-13, 10:51 pm)
பார்வை : 98

மேலே