சச்சின்

இந்தியாவின் அடையாளம் நீ!
சாதனைகளின் சிகரம் நீ!...
எவரும் எட்டவே முடியாத
சாதனை வானம் நீ...

எத்தனையோ சோதனைகள் உனக்கு...
இன்றும்...
வாயால் பேசும் அனைவருக்கும்
உனது மட்டையால் மட்டுமே
பதிலளித்து
பழக்கப்பட்டவன் நீ...
இன்றும்(23.02.13)
மட்டையாலேயே பேசியிருக்கிறாய்...

உனது இவ்வளவு
உயரத்திற்கு காரணம்
உனது பணிவு,
உண்மையான உழைப்பும்,
கடவுளின் ஆசியும்...

உன்னால் மட்டை பந்து
விளையாடி,
தொலைக்காட்சியில் மட்டை பந்து பார்க்கும்
எத்தனையோ கோடி
உலக மட்டை பந்து ரசிகர்களின்
வணங்கா தெய்வம் நீ...

எங்களின் பாரதத்தின் ரத்னமே...
உன்னால் பாரத ரத்னாவும் அழகு பெரும்
நீ விருது பெரும் அந்நாளில்...

உன் மீதான எனதன்பு கூட
ஒரு தலை காதல் போன்றதே...

ஏனெனில் எனதன்பு
உனக்கு புரியாதவரை...
வாழ்க நீ! வளர்க உன் பெருமைகள்...

எழுதியவர் : ந. ஜெயபிரகாஷ், ஆசிரியர், நெ (24-Feb-13, 12:21 am)
பார்வை : 543

மேலே