தம்பி,தங்கைகளுக்கு ஒரு கதை ..!

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன ...!

அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..

அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் - என்றாள்...!

இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் ...!

மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் - ஆகும் என்றாள் ...!

அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை ...!

மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் ...?
*
*
*
*
*

விடை :

முகத்துக்கு உதவும் என்றது :மஞ்சள் பயிரிட உதவும் ...

வாய்க்கு உதவும் என்றது :வெற்றிலை பயிரிட உதவும் ...

பிள்ளைக்கு உதவும் என்றது :தென்னம் பிள்ளை பயிரிட உதவும் ...
நன்றி : பேராசிரியர் .எ .சோதி (புதிர் கதைகள் )

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (19-Mar-13, 3:48 pm)
பார்வை : 939

மேலே