விதிகளை மதிப்பவன்

நில்,கவனி,செல்

விதிகளை உயிரென
மதிப்பவன் நான்

எனை நில்
என்றாய் நின்றேன்

எனை கவனி
என்றாய் செய்தேன்

எனை செல்
என்றாய் சென்றேன்

நேர் கொண்ட பார்வையும்
நிதானமான நடையுமாய்
என் வழியில் நான் செல்ல

சிகப்பு பொட்டிட்டு
எதிர்நோக்கி நீ
வந்து எனை
நில் என
சொன்னது நீதான்

உனை மதித்து
நான் சட்டென நின்று
நிறம் மாறும்
அல்லது மறையும்
என உனை
கவனிக்க

உன்
கரும் கூந்தல்
நிலவு நெற்றி
நட்சத்திர விழிகள்
பளிங்கு கன்னம்
கோவைபழ உதடு

என எல்லாமும்
நான் கவனிக்க
வேண்டியே நீ
அசைந்து ஆடி
அன்ன நடை பழகி
புன்னகை பூத்து
எனை ஈர்த்து
சென்றவளும் நீ தான்
நீயே தான்

எனை கடந்த
வேளையிலே
பறந்து விரிந்த
சாலையிலே
தெரியாதது போல்
உரசி நீ செல்ல

உன் தாவணி
எனை பற்றி
இழுத்து சொன்னது
பாதையை திருப்பு

இப்பொழுது
நீ பொய்யாய்
புலம்பி கொண்டு
என் முன் செல்கிறாய்

நானோ பாவம்
பித்து பிடித்து
உன் பின்னால்
செல்கிறேன்

நில் கவனி செல்
சொன்னது நீதான்

நானோ
விதிகளை உயிரென
மதிப்பவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (24-Feb-13, 5:32 pm)
பார்வை : 87

மேலே