சத்தியம் தேடும் வாசற்படிகள்
செங்கதிரோன் படம்
பிடிக்கிறான்
சத்தியத்தின் வாசற்படிகளைத் தேடி
சுட்டெரித்தபடியே...!
கூடு கட்டிக்
குடி புகுகிறது
குளவிகள் எல்லாம்
மனிதரில்லா வீட்டில் ...!
சொக்கன் வந்து விடுகிறான்
சொர்கத்தின் வாசல்
திறந்தால் மட்டுமே ...!
சொகுசாக
அசையாமல்
எட்டிப் பார்க்கிறது
சில்லறை உண்டியல் ...!
சேவலோன்
பசித்திருக்க
விலை போகிறது
கருவாடுக ளெல்லாம்...!
தமிழச்சிக்கு
காதோரம் பூத்தது
சாம்பல் தின்னும்
மசக்கைக்காரியின்
அழுகுரல்...!
சம்பல் காடுகளில்
இசைபாடி வட்டமடித்தது
வேடந்தாங்கல் உலா ..!