இருட்டைத் தேடும் பூக்கள்

இருட்டிலே
ஒளி ஏற்றுகிறது
ஒலி படைக்கிறது
வெள்ளிப் பூக்கள் பவனி ---கரும்பலகை

வெளிச்சத்தைத்
தேடிச் செல்லும்
இருட்டுப் பூக்கள் ---கண்கள்

வளைந்து நெளிந்த இருட்டிலே
காத்திருக்கின்றன
பச்சை மலைகள் அணிவகுப்பு --சாலையோர மரங்கள்

அசையாத இருட்டிலே
மிதக்கின்றன
வெள்ளைப் பூக்கள் பவனி --அல்லி மலர்கள்

அழைக்கின்ற நீல இருட்டிலே
நகர்த்திவிடும்
வெள்ளை மாளிகை ---கப்பல்

அசையாமல் நீலம்
வெளுக்கின்றது
வெள்ளைப் பூக்களால் --கடல் அலைகள்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-Feb-13, 11:04 am)
பார்வை : 121

மேலே