எது காதல்?
பல நாள் பழகி ஒரு நாளில் மறப்பது காதலா?
ஒரு நொடியில் நினைத்து பலநாள் காத்திருப்பது
காதலா?
உயிருக்கு உயிராய் இருப்பது காதலா?
உயிரை எடுப்பது காதலா?
உள்ளத்தை கொடுப்பது காதலா? உள்ளத்தை காயப்படுத்துவது காதலா?
காதலை காயப்படுத்துவது காதலா?
காதலை மேன்மையாக்குவது காதலா?
எது காதல்?
காதல் என்பது இதம் போன்றது
இதயத்தை ஒருவருக்கு கொடுத்து
அவருக்கென்றே வாழ்வதுதான்
காதல்
காதல் மின்னல்போல் தோன்றி மறைவது
ஆனால் நீங்க இடம் பெறுவது
காதலால் உயர்ந்தவர் உண்டு
காதல் இன்றி உலகம் இல்லை
எங்கும் காதல் எதிலும் காதல்
காதலே உலகம்.