நிற்கும் நாட்கள் ....???

ஓகோ என்று சொல்லும்
வாழ்க்கையும் இங்கு இல்லை ..
ஐயகோ என்று சொல்லும்
அபத்தமும் இங்கு இல்லை ..
ஏதோ ஓடிக்கொண்டு இருக்கிறது
இந்த வாழ்க்கை சலிப்பாய்...
எதற்காக இந்த சலிப்பு
வெறுப்பு காரணம் புரியவுமில்லை ....
கண்களை மூடவும் முடியாமல்
காட்சிகளை காணவும் முடியாமல்
ஏதோ வனவாசம்போல் நகராமல்
நிற்கிறது என் நாட்கள் ..

எழுதியவர் : வீரா ஓவியா (25-Feb-13, 10:26 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 80

மேலே