.நாடு முன்னேறட்டுமே

..
நாடுங் கொஞ்சம் முன்னேறட்டுமே
நாளுங் கொஞ்சம் பொறுங்ளேன்.
கூடும் நலன்கள் கூடட்டுமே.
கூச்சலைச் சிறுக நிறுத்துங்களேன்.
வளரும் பாதையில் செல்கிறதா?
வளர்ச்சி விகிதம் கணியுங்கள்.
ஓட்டுனர் இறுக்கம் ஆகிவிட்டால்
ஓடுந் திசையுந் தவறாதோ!!
அரசிய லாதாயந் தேடுவோரே
அடிக்கடி மாற்றம் நாடுவார்.
அதனால் நாட்டுக்கு நலமில்லை
அய்யோ பாவம் மக்ககளே.
பிள்ளைப் பேற்றின் வேதனையோ
பெற்ற பின்னே பேரின்பம்.
உயர்ந்திடப் பட்டிடுஞ் சிரமங்களோ
உயர்த்து மென்றால் சகித்திருப்போம்...