காற்றே யாரை தேடி வந்தாய் ?????????
சுகமாய் தீண்டும் காற்றே
சொந்தம் தேடி வந்தாயோ
சொந்தம் யாரென கண்டாயோ
எல்லோர்க்கும் உள்ளே சென்றாய்
உயிர் சுவாசமாய் ஒரு நொடி நின்றாய்
ஏமாற்றத்தால் அனலாய் மாறி வந்தாயோ
பாலினம் பாராத உன் தேடல்
பூக்கள் காணாத உன் வாடல்
தினமும் தேவை உன் ஊடல்
நீ இல்லையென்றால் நான்
வெறும் கூடு ஆவேனே
அழகா நீ அறிவா நீ
இரண்டும் கலந்த உருவமில்லா
மனிதம் நீ
உண்டால் தீராத பசியும் நீ
ருசியே இல்லாத உணவும் நீ
பூக்களோடு வந்தால் பூவின் வாசம் கொண்டாய்
உன் நிஜ வாசனை யார் அறிவார்
அவர்தான் உன் காதலரோ
அவரை தேடி வந்தாயோ