மறந்துவிட்ட கவிதை வரிகளுக்கு சமர்ப்பணம்..

கவிதையை சிந்தனையில் கருவாக்கி
அதை கோர்வையாக உருவாக்கும்போது
மறந்துவிட்ட வரிகளை
நான் எங்கே சென்று தேடுவேன்?

வானத்தில் பார்க்கும்போதே
மறைந்துவிட்ட காகமும்
நம்மை கடக்கும்போதே
கரைந்துவிட்ட மேகமும்
எவ்வாறு திரும்ப கிடைக்காதோ
அவைகளைப் போல
கலைந்து போன கவிதை வரிகளே!
எவருடைய சிந்தனையில் போய் ஒளிந்து கொண்டுள்ளீர்கள்!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Feb-13, 8:30 pm)
பார்வை : 155

மேலே