அதே நாள்
அன்று ஞாயிற்று கிழமை, விடுமுறை நாள், தத்தம் வேலைகளுடன் வீட்டில் எல்லோரும் மும்முரமாக கடமைகளுடன் இருந்தார்கள். ஞாயிறு என்றாலே இளைஞர்களின் குதுகலத்து குறைவிருக்காது. அந்த காலையும் அப்படியே தான்.
ஆள்நடமாட்டம் குறைவான பகுதி ஒன்றில் ஜீவாவும் அவனது நண்பர்களும், ஏதோ ஒரு திட்டத்தை நடைமுறை படுத்தப்போகும் ஆர்வம் அந்த கண்களில், திடீரென தன்னை சுதாகரித்து கொண்ட நண்பன் ஒருவன் "டேய் ஜீவா அதை ஒழியடா யாரோ வாரங்கள்" "என்னடா சிவ பூசைல கரடி மாதிரி, யாரடா.." என்று அலுத்துக்கொண்டு தலை நிமிர்கையில் ஜீவாவின் பள்ளி நண்பனின் மாமா ஜெய் வந்து கொண்டிருந்தார். சற்றும் தாமதிக்காத ஜெய்
"என்ன தண்ணியா..??" என்று பேச்சை ஆரம்பிக்க ஜீவா "நியூ இயர் தானே மாமா, ப்ரண்ட்ஸ் ஆசைப்பட்டாங்க...." என்று இழுத்து முடித்தான். "உந்த பழக்கத்த விடுங்கடா, அட்வைஸ் பண்ணினாலும் கேக்க மாட்டீங்க உங்க வயசு அப்படி, இருந்தாலும் என்ர அனுபவம் ஜீவா, இப்ப விளங்காது இதே நாளுக்காக இனொரு நாள் பீல் பண்ணுவீங்கடா" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஜெய்.
ஜீவாக்கு இந்து புரிந்ததோ தெரியாது, ஜெய்க்கு இந்த காட்சி செக்குமாட்டை போல் சுத்திக்கொண்டிருந்தது. நேராக வீட்டுக்கு வந்து யாரிடமும் பேசமால் படுத்து விட்டான், "டேய் ஜெய் என்னடா செய்றீங்க, என்ன தண்ணியா..?" ஆரம்ப பள்ளி விஞ்ஞான வாத்தியார் முகுந்தனின் அதட்டல். "சார்" தடுமாறுகையில் "என்ன இங்க செய்றீங்க" என்ற முகுந்தனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியமால் தள்ளாடு நண்பர்களுக்கு மத்தியில் நிற்க முடியாமல் விழுந்துவிடும் இவன். திடீரென வந்துபோகும் காட்சிகளால் நிஜத்திலே விழுந்தவன் போல் திடுக்கிட்டு எழுந்தான். என்ன அசதியோ மீண்டும் அப்படியே சரிந்து கிடக்கையில் இதே காட்சி தான் அவன் கண்களில் மீண்டும் மீண்டும்.
இதே பொய்தான் அன்றும் சொன்னான் ஜெய். முகுந்தனும் இன்று ஜெய் சொன்னதை தான் அன்று சொன்னான். அன்று சொன்ன அந்த நாள் இப்போது என்று நினைக்கையில் என்னவோ போல் இருந்தது ஜெய்க்கு. குடி ஒன்றும் அவனுக்கு புதிதல்ல பள்ளி செல்லும் அந்த காலத்தில் குடிகார தந்தையின் அதட்டலில் போய் வாங்கி வந்தான். நாளாக வரும் வழியில் பழகியவன். நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்தவன், தந்தை இறந்த பின் குடும்ப சுமையை சுமக்க கூலிக்கு போனான். அந்த சிறு வயதில் வலி மறக்கும் வழியாக இதை மாற்றி கொண்டவன், வளர்ந்தும் அவனால் விட முடியவில்லை மாறாக புதிய கூட்டு புதிய போதைக்கு அடிமை என அவனை புதிய உலகத்துக்கு கொண்டு சென்றது.
கடந்து வந்த உலகத்துக்கு போய் கொண்டிருக்கையில் தொலைபேசியில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு கண் விளித்து வெளியே வந்து தொலைபேசியை எடுத்தான் ஜெய்.
"டேய் மச்சான் உடனம் எங்கட வீட்டுக்கு வா அப்பாக்கு ஏலாம இருக்கு. அவசரம்" எந்த வார்த்தையும் பேசாமல் உறைந்து போனவனாய் அழைப்பை எடுத்த நண்பனிடம் "என்னடா என்ன" என்று கேட்டான் ஜெய். "நீ வா முதல் சொல்லுறன்" என்று அழைப்பை துண்டித்து விட்டான்.
ஜெய் போகவும் அவர்கள் வைத்திய சாலைக்கு புறப்படவும் நேரம் சரியாக இருந்தது, இது அவசர சிகிச்சை பிரிவு ஏற்கனவே வந்திருந்ததாலும், அணை போட முடியாமல் புரண்டு கொண்டிருந்த எண்ண அலைகளை கட்டுபடுத்த முடியாமல் இருந்தவனிடம் மீண்டும் காலம் கனவுகளானது.
இதே மாரிதான் ஜெய்யும் மூக்கால் ரத்தம் அடிக்கடி வந்து கொண்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாமலும் இருந்தான், திடிரென ஒரு நாள் மயங்கி விழுந்தான். ஆனால் மயங்கியதால் பயந்துவிட்டான், அடுத்தநாள் வைத்திய சாலைக்கு போனபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. கைகளை பிடித்துக்கொண்ட டாக்டர் "மனச திடப்படுத்திக்கோங்க, தம்பி உங்களுக்கு கான்சர் வெரி சீரியஸ்" அந்த சொல் அதான் வாழ்க்கையை புரட்டி போட்டது. போட்டும் என்ன கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தேவையில்ல தானே. பித்து பிடித்தவன் போல் ஆனான்.
கண்களில் வழியும் கண்ணீரை துடைப்பதற்காய் கைகளை எடுக்கையில் தான் கையை நண்பன் பற்றி இருப்பதை உணர்ந்து "என்னடா என்னவாம் அப்பாக்கு? ஜெய் கேட்டு முடிக்கமுதலே நண்பன் "அப்பாக்கு கான்சர் ஆம்டா, வயித்தில கட்டியாம்" என்று அழத் தொடங்கிவிட்டான். அபோது தான் ஜெய்க்கு புற்றுநோய்க்கு பல வழிகள் இருக்குமெண்டு தெரிந்திருக்கும். அந்த வழியால் வந்த வைத்தியரை பார்த்த ஜெய் நண்பனை சமாதனம் செய்வதற்காய் "இப்ப என்னமாரி பிரச்சன இல்லைதானே " என்று பேச்சை தொடங்கினான்.
"இப்பதான் ஆரம்பம். பெரிசா பிரச்சனை இல்லை தம்பி, நல்ல காலம் கொண்டந்தீட்டிங்க, அறிகுறியல் இருந்த உடனமே கொண்டு வாங்க, நீங்களா எந்த மெடிசின்ம் செய்யதயுங்கோ. இப்ப நல்ல வைத்திய முறை,நல்ல டாக்டர்ஸ், ஆரம்பத்திலேயே கண்டு பிடிச்சா குணப்படுத்தலாம். அவருக்கு இந்த விசயத்த சொல்லாதயுங்கோ. சொன்ன அவருக்கு நம்பிக்கை போடும், கான்சர் எண்டு தெரிஞ்சா வாழ்க்கையே இல்லை எண்டமாரி நினைக்க கூடா, முதல் நம்பிக்கை வேணும், மனம் சோரக்கூடாது, மிச்சம் தான் வைத்தியம்." என்ற ஏதோ தடுமாறியவனாய் "டொக்டர்" என ஜெய் இழுத்தான், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை,
"தம்பி இது தொத்து வருத்தம் இல்லை, அன்பாக பழகுங்கோ, வருத்தம் தீய பழக்கம் உள்ளவர்களுக்கும் வரலாம், இல்லாதவர்களுக்கும் வரலாம், புற்றுநோய் பல வைகளில் வரலாம், உதாரணத்துக்கு புகைத்தால் உங்களுக்கும் வரும், சுவாசிக்கும் மற்றவருக்கும் வரும், ஒரே நேரத்தில் பலரை கொல்ல முயற்சியை எடுகிரீர்கள்.."என்று கூறி விட்டு தனது அறையை நோக்கி போய் விட்டார்,
"டேய்.. என்னடா சின்னப்பிள்ள போல அழுதுடு. அதான் டாக்டரே சொல்லிட்டாருல்ல.. குணப்படுத்த முடியாது எண்டு இல்லனு.. அப்புறம் ஏன் டா?" என்று அழுதுகொண்டிருந்த நண்பனை ஒருவாறாக சமாதனம் பண்ணி விட்டான். "சின்ன கட்டியாம், வெட்டி எடுக்கணுமாம், கதிரியக்கம் மூலம் அந்த கலங்களை அழித்து விடலாம் எண்டு சொன்னங்கடா, அப்பா தான்கிக்குவார என்று பயமா இருக்கடா " என்று ஜெய் ஐ கட்டி அணைத்தவன், உண்மையிலே அழுது விட்டான்.
ஜெய்யாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.சாகுறநாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகம் ஆகிடும் என்று சொல்லாம சொன்னார்கள். நரகத்தின் வாசல் போலே தான் இப்பொது வாழ்க்கை. ஜெய் வைத்தியசாலையில் இருந்தபோது வைத்தியர் சொல்லியது தான் அடிக்கடி ஞாபகம் வரும்.
ஒருநாள் இடையில் குறுக்கிட்ட ஜெய் "இனி ஒண்டும் செய்யேலாத சார்" என்று கெஞ்சி முடிப்பதுக்குள், "மரணத்தை தடுக்கேலா தள்ளி போடலாம், ஆரம்பத்திலேயே கொண்டு வந்திருந்தா எந்த ப்ரோப்லமும் இருந்திருக்கா" "ஒழுங்க கிளினிக் வாங்க, மருந்துகளை போடுங்க" என்றது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது,
இப்போது தான் தன்னுடைய தவறான செயற்பாடுகள் தான் உயிரை கேள்விக்குறி ஆக்கிவிட்டது என்று ஜெய்க்கு தோன்றியது. மாலை ஆகிவிட்டது தெரிந்தது, அபோது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது நாளைக்கு கரண்ட் பிடிக்கணும், கொஞ்சம் ஓய்வு எடுக்கவேணும் என்று. " நான் போட்டு வாறன், அப்பாவ பாத்துக்கோ.." என்று நண்பனிடம் கூறிவிட்டு வேகமாய் நடந்தான் வீட்டை நோக்கி.. மீண்டும் வாழ்வை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு...
முற்றும்...