தாய்மைக்கு ஒரு உண்மை

வான்வெளியே தலை சாய்க்கும்
தாயன்பின் மடியினிலே

மூலகமே முகம் காட்டும்
தாயவளின் முகம்தனிலே

ஓலமிடும் இடியொலியும்
தாளமிடும் தாயன்பில்

தோத்திரங்கள் தோற்றுவிடும்
அன்புந்தான் மந்திரத்தில்

உத்தமரும் உதித்து நின்ற
உத்தமமே தாயின் மடி

சத்தியத்தை சொல்வதென்றால்
சத்திரமே தாய்க்கு மடி

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (26-Feb-13, 11:22 am)
பார்வை : 224

மேலே