என் உயரம்

அழைப்பிதழ் வைத்தும்
வீட்டிற்கு வராதவர்கள்
அழைக்காமலேயே
வந்து நின்றனர் !

வாசலில் நிற்கும் என்
வாகன வசதியை
பார்வையிட அல்ல !!

என் தன்னம்பிக்கையின்
அகலத்தை அளவிட !!!

புன்னகை பூக்கக் கூட
நேரமின்றி என்னைக்
கடந்து சென்றவர்கள்
இன்முகத்தோடு என்னைத்
தேடி வந்தனர் !

என் வீட்டு
வசதி வாய்ப்புகளைப்
பார்வையிட அல்ல !!

என் விடாமுயற்சியின்
ஆழத்தை அளவிட !!!

ஓரிரு வார்த்தைகளில்
உரையாடலை முடித்தவர்கள்
நீண்ட நேரம் என்னுடன்
உரையாட விரும்பி வந்தனர் !

மாளிகையாக மாறிவிட்ட
என் மனையை
பார்வையிட அல்ல !!

என் வெற்றியின்
உயரத்தை அளவிட !!!

எழுதியவர் : ஜீ ஜி (26-Feb-13, 11:35 am)
சேர்த்தது : jgeegiy (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 271

மேலே